[X] Close >

எனது ஆணுறுப்பை நானே வெட்டிக் கொண்டேன்: ரேப் சாமியார் வாக்குமூலம்

Kerala-Law-Student-Chops-Off-Genitals-Of-A-Swami--Her-Alleged-Rapist

கேரளாவின் பெடாவில் பெண் ஒருவரை ரேப் செய்ய முயற்சித்ததால் அந்தப் பெண் கத்தியால் அவரது ஆணுறுப்பை வெட்டி எறிந்ததாக வந்த செய்தியை அந்தச் சாமியார் மறுத்துள்ளார். தானே தனது ஆணுறுப்பை வெட்டிக் கொண்டதாக அவர் கூறியுள்ளார்.


Advertisement

ஹரிஸ்வாமி என்ற அந்தச் சாமியார் மீது பாலியல் பலாத்காரக் குற்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் உள்ள அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையின் போது, தனது ஆணுறுப்பை அந்தப் பெண் வெட்டவில்லை எனவும் தானே வெட்டிக் கொண்டதாகவும் கூறியுள்ளார். தன்னைப் போன்ற சாமியாருக்கு அதனால் எந்தப் பலனும் இல்லை என்பதால் தானே அதை வெட்டி விட்டதாகக் கூறியுள்ளார்.

ஹரிஸ்வாமி எர்ணாகுளம் மாவட்டம் கொல்லன்சேரியில் டீக்கடை வைத்துப் பிழைத்திருக்கிறார். அதன்பிறகு அவருக்கு இந்து மதத்தின் மீது தீவிரப் பற்று ஏற்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள முக்கியமான பாஜக பிரமுகர்களிடம் நெருக்கமான தொடர்பு வைத்திருந்திருக்கிறார். பின்னர் அவர் சன்யாசியாகப் போக முடிவு செய்து, தனது சகோதரரிடம் கடையை ஒப்படைத்து விட்டு வெளியேறினார்.


Advertisement

பின்னர் பெடாவில் உள்ள சட்டம்பி ஸ்வாமி ஆசிரமத்தில் சிறிது காலம் இருந்திருக்கிறார். பின்னர் அங்கிருந்தும் வெளியேறினார்.

அதன்பிறகு தற்போது பாலியல் புகார் கொடுத்துள்ள பெண்ணின் அம்மாவுடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண்ணின் அப்பா வாத நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அவரை தான் குணமாக்கி விடுகிறேன் என்று சொல்லியிருக்கிறார். அதற்காக ஒரு சில பூஜைகள் செய்வதாய் அடிக்கடி அவர் வீட்டிற்கு வந்து சென்றிருக்கிறார். அப்போதிருந்தே இந்தப் பெண்ணை அவர் பாலியல் துன்புறுத்தல் செய்து வந்திருக்கிறார். அப்போது இந்தப் பெண் 12ம் வகுப்புதான் படித்துக் கொண்டிருந்த மாணவி. நேற்று அந்தப் பெண்ணை அவர் பலாத்காரம் செய்ய முயன்ற போது அவர் ஆணுறுப்பை வெட்டியதில் மருத்துவமனையில் அனமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close