[X] Close >

குரல் மாதிரி சோதனைக்கு மறுப்பு: விதிகளில் இடம் இல்லை என்கிறார் தினகரன்

ttv-dhinakaran-refuses-sample-voice-test

டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட டிடிவி தினகரன் குரல் மாதிரி பதிவு சோதனைக்கு மறுப்பு தெரிவித்தார்.


Advertisement

அதிமுக (அம்மா) அணியை சேர்ந்த டிடிவி தினகரன், இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும், இதற்காக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவருடன் ரூ.50 கோடி பேரம் பேசியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக டெல்லி போலீஸார் விசாரணை நடத்தி, சுகேஷ் சந்திரசேகர், டிடிவி தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா, ஹவாலா ஏஜென்ட் நரேஷ் ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்கள் 4 பேரும் தற்போது டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பது குறித்து தினகரனும் சுகேஷும் பலமுறை செல்போனில் பேசியுள்ளதாகவும் அவர்களின் உரையாடல் அடங்கிய பதிவு தங்களிடம் உள்ளதாகவும் டெல்லி போலீசார் தெரிவித்தனர். அந்த பதிவில் உள்ள குரல்கள் இவர்களுடையதுதான் என்பதை நிரூபிக்க, இருவருக்கும் குரல் மாதிரி சோதனை நடத்த அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் அவர்கள் கோரிக்கை வைத்தனர். போலீசாரின் கோரிக்கையை ஏற்ற டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம் இருவரின் குரல் மாதிரிகளை சோதனை செய்ய இரு தினங்களுக்கு முன் அனுமதி வழங்கியது.


Advertisement

இந்நிலையில் டெல்லி நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட டிடிவி தினகரன், குரல் மாதிரி பதிவு சோதனைக்கு மறுப்பு தெரிவித்தார். குற்றவியல் சட்டத்தில் குரல் மாதிரியை பதிவு செய்ய விதிகள் இல்லை எனவும் டிடிவி தினகரன் அப்போது கூறியுள்ளார்.

Related Tags : ttv dhinakaran AIADMK delhi
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close