சட்ட மாணவி பாலியல் புகார்: சின்மயானந்தாவிடம் 7 மணி நேரம் விசாரணை

Accused-by-law-student-of-rape--BJP-leader-Chinmayanand-grilled-for-7-hours

சட்டக் கல்லூரி மாணவியின் பாலியல் புகாரை அடித்து, பாஜக தலைவர் சின்மயானந்தாவிடம் சிறப்பு விசாரணைக் குழுவினர் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். 


Advertisement

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் மத்திய முன்னாள் இணை அமைச்சரும் பாஜக தலைவருமான சின்மயானந்தாவுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்து, வீடியோ வெளியிட்டிருந்தார். அதை வெளியிட்ட பின் மாயமான அந்த மாணவி, பின்னர் ராஜஸ்தானில் இருந்து மீட்கப்பட்டு உச்சநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மாணவியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் சின்மயானந்தா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.


Advertisement

இந்நிலையில், சின்மயானந்தா மீது புகார் அளித்த மாணவி மற்றும் சகோதரரை வேறொரு கல்லூரிக்கு மாற்ற உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது. நீதிபதிகள் ஆர்.பானுமதி மற்றும் ஏ.எஸ்.போபன்னா தலைமையிலான அமர்வு, பார் கவுன்சிலுக்கு இந்த உத்தரவை பிறப்பித்தது.  இந்நிலையில் அந்த மாணவி, 'சின்மயானந்தா தன்னை ஒரு வருடமாக, பாலியல் வன்கொடு மை செய்ததாகத் தெரிவித்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறப்பு விசாரணைக் குழு 11 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தியது. 

இந்நிலையில் மாணவி புகார் பற்றி சிறப்பு விசாரணைக் குழு, சின்மயானந்தாவிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement