விக்ரம் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து முயற்சித்து வரும் நிலையில், அவர்களுடன் நாசா ஆய்வாளர்களும் களமிறங்கியுள்ளனர்.
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ சந்திரயான் 2 விண்கலத்தை ஏவியது. அதிலுள்ள விக்ரம் லேண்டர், நிலவில் தரையிறங்குவதற்கு சிறிது தூரமே இருந்த நிலையில் சிக்னல் துண்டிக்கப்பட்டது. விக்ரம் லேண்டருடன் தொடர்புகொள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்க இஸ்ரோ மேற்கொண்ட முயற்சிக்கு பாராட்டு தெரிவித்த நாசா, தாங்களும் இந்த பணியில் கைக்கோர்க்க தயார் என தெரிவித்தது. இதற்காக இஸ்ரோ ஒப்புதலை பெற்று விக்ரம் லேண்டரை தொடர்புகொள்ளும் முயற்சியில் நாசா விஞ்ஞானிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அதன்படி கலிபோர்னியா, ஸ்பெயின் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 3 இடங்களிலுள்ள ஆய்வு நிலையங்களிலிருந்து ரேடியோ அதிர்வெண்கள் மூலம் விக்ரம் லேண்டருக்கு ஹலோ என்ற செய்தியை நாசா தொடர்ச்சியாக அனுப்பி வருகிறது.
நாசாவுக்கு சொந்தமான லேசர் ரிப்ளெக்டர் என்ற கருவி விக்ரமில் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் ஹலோ செய்திக்கு விக்ரம் லேண்டரிலிருந்து ஏதாவது பதில் தகவல் வருமா என நாசா விஞ்ஞானிகள் காத்திருக்கின்றனர்.
Loading More post
PTExclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும் தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
ஜெயலலிதா நினைவு இல்லம் ஜன.28ல் திறப்பு - தமிழக அரசு
9 நாட்களில் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு
டிராக்டர் பேரணி: ட்விட்டர் மூலம் குழப்பத்தை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி - உளவுத்துறை
சூடு பிடிக்கும் அரசியல்களம்; அடுத்தக்கட்டத்தில் விவசாயிகள் போராட்டம்.. முக்கியச் செய்திகள்
PTExclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும் தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?