கெளதம் வாசுதேவ் மேனனுக்கு ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக் எச்சரிக்கை ! ஏன் ?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் எச்சரிக்கை விடுத்துள்ளார். 


Advertisement

பிரபல திரைப்பட இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் ‘குயின்’ என்ற வெப் சீரிஸ் படமாக்கி வருகிறார். இதில் பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதில் ஒரு பெண் அரசியல் வாதியின் சுயசரிதை குறிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த வெப் சீரிஸ் முன்னாள் முதலைமைச்சர் ஜெயலலிதாவின் சுயசரிதையை தழுவி தான் படமாக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியானது. 


Advertisement

இந்நிலையில் இது தொடர்பாக கௌதம் வாசுதேவ் மேனனுக்கு  ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில், “பத்திரிகைகளின் மூலம் கௌதம் வாசுதேவ் மேனன் ‘குயின்’ என்ற தலைப்பில் வெப் சீரிஸ் எடுக்க உள்ளார் எனத் தெரிந்து கொண்டேன். அத்துடன் அந்தப் படம் ஒரு அரசியல்வாதியின் சுயசரிதை என்று அவர் அறிவித்துள்ளார். எனினும் அது யாருடையது என்று அவர் இன்னும் தெரிவிக்கவில்லை. ஏற்கெனவே ஏ.எல்.விஜய் எடுக்கும்  ‘தலைவி’ என்ற படம் ஜெயலலிதா அவர்களின் கதை என்பதால், விஜய் எங்களிடம் கதை கூறி அனுமதி பெற்றார். 

எனவே பத்திரிகை மூலம் ஒன்றை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். யாராவது எங்களது குடும்பத்தின் அனுமதி இன்றி ஜெயலலிதா குறித்து படம் எடுக்க முற்பட்டால் அவர்கள் மீது சட்ட ரீதியலான தீவிர நடவடிக்கை பாயும். ஆகவே இயக்குநர் கௌதம் மேனன்  ‘குயின்’ என்ற வெப் சீரிஸ் எந்த அரசியல்வாதியின் சுயசரிதை என்பதை விரைவில் தெளிவுப்படுத்த வேண்டும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார். 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement