ஐபோன் கேமரா வடிவத்துடன் தனது உடையின் டிசைனை ஒப்பிட்டு மலாலா ட்வீட் செய்துள்ளார்.
கலிஃபோர்னியாவில் உள்ள ஸ்டீவ் ஜாப் அரங்கில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய மாடல் செல்போன்களை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டது. ஐபோன்-11, ஐபோன்-11 ப்ரோ, ஐபோன்-11 ப்ரோ மேக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள மூன்று மாடல்கள் அறிமுகப்படுத்தட்டன.
இந்த மாடல்கள் விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஐபோன்-11 ப்ரோ, ஐபோன்-11 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் மூன்று கேமராக்களுடனும் வெளியாகியுள்ளது. பின்பக்க கேமராக்கள் மூலம் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் நின்றவாறே மூன்று கோணங்களில் புகைப்படம் எடுக்க முடியும்.
இந்நிலையில் மூன்று கேமராக்களின் வடிவத்தை இணையவாசிகள் கிண்டலடித்து வருகின்றனர். தேங்காயின் கண் என்றும், ஸ்பிட்ஜெட் ஸ்பின்னர் என்றும் நகைச்சுவையாக பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக தனது ஆடையின் டிசைனை குறிப்பிட்டு பதிவிட்டுள்ள மலாலா, இது தற்செயலானதா? ஐபோன் மாடல்கள் வெளியான நாளில் நான் இந்த உடையை அணிந்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார். அவர் அணிந்திருந்த அந்த உடையில் ஐபோன் கேமராக்கள் போல டிசைன் இருந்தது குறிப்பிடத்தக்கது.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்