குழந்தை கொலை தொடர்பாக 2-வது கணவர் கைது - தாயிடம் விசாரணை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திருவள்ளூர் மாவட்டம் புழலில் இரண்டாவது திருமண வாழ்விற்கு தடையாக இருந்த 4 வயது குழந்தையை கொன்ற இரண்டாவது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


Advertisement

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரமேஷ், பவானி தம்பதி காதலித்து ‌திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் மணவாழ்க்கை 6 ஆண்டுகள் நீடித்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக 4‌ மாதங்களுக்கு முன் இவர்கள் பிரிந்தனர். இதையடுத்து தனது 4 வயது மகளை தாயிடம் கொடுத்து பவானி வளர்த்து வந்தார். பின்னர், கொடுங்கையூரைச் சேர்ந்த ஆசிப் என்பவரை பவானி இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். 


Advertisement

இந்நிலையில் நேற்று முன்தினம் சிறுமி உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டதாக தந்தை ரமேஷிற்கு பவானி தகவல் கொடுத்தார். அவர் வந்து பார்த்தபோது சிறுமியின் உடலில் காயங்கள் இருந்ததால் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தகவல் அளித்தார். இதன் பேரில் தாய் பவானி மற்றும் இரண்டாவது கணவர் ஆசிப்பிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இந்நிலையில் குழந்தையை கொன்றதாக இரண்டாவது கணவர் ஆசிப்பை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தாயிம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

loading...

Advertisement

Advertisement

Advertisement