‘ஒழுங்கீனம் காரணமாகவே நெல்லை நிர்வாகிக்கு நோட்டீஸ்’ - கே.எஸ்.அழகிரி

Why-Congress-sent-Notice-for-Nellai-chief-----KS-Alagiri

ஒழுங்கீனமாக செயல்பட்டதாலேயே நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக, கே.எஸ்.அழகிரி விளக்கமளித்துள்ளார். 


Advertisement

நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவது தொடர்பாக செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில், அதற்கு காரணமான நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் சிவக்குமாருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

தீர்மானம் தொடர்பாக அவர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்றும் கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது.‌ கூட்டணிக்கட்சிகளின் அழுத்தம் கார‌ணமாகவே‌ காங்கிரஸ் மாவட்ட தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. 


Advertisement

இதனை மறுத்துள்ள கே.எஸ்.அழகிரி, “3 மாவட்ட தலைவர்கள் இணைந்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். கூட்டத்தில் விவாதித்தே தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். யாருக்கும் தெரியாமல் தீர்மானம் அச்சிட்டு கொடுத்தது தவறு. தீர்மானம் நிறைவேறுவதற்கு முன்பே வெளியிட்டது தவறு. எனக்கு யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது. கடவுளே அழுத்தம் கொடுத்தாலும் ஏற்க மாட்டேன். ஒழுங்கீனமாக செயல்பட்டதாலேயே நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement