சேலத்தில் வீட்டின் குளியலறையில் ரத்தத்தால் எழுதி வைத்து விட்டு காணமல் போன பெண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
சேலம் மாவட்டம் சின்னத் திருப்பதியைச் சேர்ந்தவர்கள் ஹரிஹரன் - தமிழ்ச்செல்வி தம்பதி. ஜவுளித் தொழில் செய்து வரும் ஹரிஹரன் வழக்கம் போல் பணி முடித்துவிட்டு கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி வீடு திரும்பினார். ஆனால் அங்கு அவரது மனைவி தமிழ்ச்செல்வி இல்லை. வீட்டில் ரத்தக்கறையுடன் ஹாக்கி ஸ்டிக் ஒன்று கிடந்தது.
தரையில் ஆங்காங்கே ரத்தம் சிந்திக் கிடந்தது. அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஹரிஹரன் வீடு முழுவதும் தமிழ்ச்செல்வியை தேடினார். குளியலறைக்குச் சென்று பார்த்த போது உறைந்து போனார் ஹரிஹரன். குளியலறை சுவரில் "விமல் ஆளுங்க... காப்பாத்து ஹரி" என ரத்தத்தால் எழுதப்பட்டு இருந்ததே அதற்கு காரணம். கதிகலங்கிப் போன ஹரிஹரன் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவர் ஹரி மற்றும் அவரிடம் பணியாற்றி வந்த விமலிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
காவல்துறையினரின் கேள்விகளுக்கு ஹரிஹரன் முன்னுக்குப்பின் முரணாகவே பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்தும்போது தமிழ்ச்செல்வி சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள தனது மகளிடம் தான் கோவையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக நேற்று இரவு தமிழ்செல்வி கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
சரணடைந்த தமிழ்ச்செல்வியை காவல்துறையினர் சேலம் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தான் தலைமறைவானதாகவும், இனி கணவருடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்றும் நீதிமன்றத்தில் தமிழ்செல்வி தெரிவித்தார்.
Loading More post
"வாக்குச்சாவடியில் சிஐஎஸ்எப் நடத்தியது இனப்படுகொலை!" - மேற்கு வங்க முதல்வர் மம்தா ஆவேசம்
”பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்!” - மாணவர்களைப் பாதுகாக்க சோனு சூட் வேண்டுகோள்
தொடங்கியது தடுப்பூசி திருவிழா: கொரோனா பரவலைத் தடுக்க பிரதமர் மோடியின் 4 கோரிக்கைகள்!
நாட்டில் புதிய உச்சம்: 1.50 லட்சத்தை கடந்த தினசரி கொரோனா பாதிப்பு; ஒரேநாளில் 839 பேர் பலி
மறைந்த மாதவராவ் வெற்றி பெற்றால் ஸ்ரீவில்லிபுத்தூரில் இடைத்தேர்தல்: தலைமை தேர்தல் அதிகாரி