காஷ்மீர் சிபிஎம் நிர்வாகி தாரிகாமி டெல்லி எய்ம்ஸ்-க்கு மாற்றம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கும் ஜம்மு காஷ்மீர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகி முகமது யூசுப் தாரிகாமி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.


Advertisement

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின் அங்குள்ள அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகியும், அக்கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் நண்பருமான முகமது யூசுப் தரிகாமியும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள அவரை, சீதாராம் யெச்சூரி உச்சநீதிமன்றத்திடம் அனுமதி பெற்று அண்மையில் சந்தித்தார். 

                             


Advertisement

இந்த நிலையில் தாரிகாமியின் உடல்நிலை மோசமானதால், அவருக்‌கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து தாரிகாமி, ஸ்ரீநகரில் இருந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement