ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணியை வீழ்த்தி மும்பை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் முன்னாள் சாம்பியன்கள் மும்பை அணியும் கொல்கத்தாவும் நேற்று மோதின. பெங்களூரில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோகித் சர்மா, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அந்த அணியின் சுனில் நரேனும், கிறிஸ் லினும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். மும்பை அணியின் அனல் பறந்த பந்து வீச்சில் கொல்கத்தா முதல் ஓவரிலேயே தடுமாறியது.
கிறிஸ் லின், 4 ரன்னில் பும்ராவின் பந்து வீச்சில் பொல்லார்டிடம் கேட்ச் ஆனார். அடுத்த தொடக்க வீரர் சுனில் நரேன், கரண் ஷர்மாவின் சுழலை, இறங்கி வந்து அடிக்க முயல, பார்த்திவ் படேலால் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். அவர் எடுத்த ரன்கள் 10. ராபின் உத்தப்பா 1 ரன்னில் பும்ரா பந்து வீச்சில் எல்பிடபிள்யூ ஆனார். 6 ஓவர்களில் அந்த அணி 3 விக்கெட்டுக்கு 25 ரன்கள் மட்டுமே எடுத்து பரிதாபமாக இருந்தது.
பின்னர் கரண் ஷர்மா தனது ஒரே ஓவரில் கம்பீர் 12 ரன், கிரான்ட்ஹோம் ஆகியோரை அடுத்தடுத்து காலி செய்ய, நிலைகுலைந்தது கொல்கத்தா. அடுத்து வந்தவர்களில் சூர்யகுமார் யாதவ் மட்டும் போராடி 31 ரன்கள் எடுக்க,
ஜக்கி தன் பங்குக்கு 28 ரன் எடுத்தார். அந்த அணி 18.5 ஓவர்களில் 107 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
மும்பை தரப்பில் கரண் ஷர்மா 4 ஓவர்களில் 16 ரன் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பும்ரா 3 விக்கெட்டுகளையும் ஜான்சன் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். மலிங்கா ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.
அடுத்து ஆடிய மும்பை அணியில் சிம்மன்ஸ் 3 ரன், பார்த்தீவ் பட்டேல் 14 ரன், அம்பத்தி ராயுடு 6 ரன், ரோகித் சர்மா 26 ரன் என விக்கெட்டுகளை பறிகொடுத்தாலும் குணால் பாண்ட்யா நிலைத்து நின்று ஆடினார். அவர் 30 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
மும்பை 14.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 108 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. கரண் சர்மா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
Loading More post
துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் உயிரிழப்பு
தமிழகத்தில் ராகுல் பரப்புரைக்கு தடை கேட்கும் பாஜக
'எந்த தொகுதியிலும் நிற்கத் தயார்..' விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்
ஆவின் பால் பாக்கெட்டில் தவளை மிதந்ததால் அதிர்ச்சி
சுவிட்சர்லாந்து பேட்மிண்டன் ஓபன்: இந்தியாவின் சிந்து காலிறுதிக்கு தகுதி!
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை