வாக்குப்பதிவு எந்திரத்தில் தில்லுமுல்லு செய்ய முடியுமா?

வாக்குப்பதிவு எந்திரத்தில் தில்லுமுல்லு செய்ய முடியுமா?
வாக்குப்பதிவு எந்திரத்தில் தில்லுமுல்லு செய்ய முடியுமா?

மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு செய்ய முடியாது என்பதை நிரூபிக்கும் வகையில் நாளை தேர்தல் ஆணையம் செயல் விளக்கக்கூட்டம் நடத்துகிறது.

உத்திரபிரதேசம், உத்தரகாண்ட் உள்பட 5 மாநில சட்டசபைகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து டெல்லியில் நடந்த 3 மாநகராட்சி தேர்தலிலும் பாஜக வென்றது. தொடர் தோல்வியால் விரக்தி அடைந்த காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடுகள் செய்யப்பட்டதாக சந்தேகமும், புகாரும் வெளியிட்டன. ஆனால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் தில்லுமுல்லு செய்ய இயலாது என்று தேர்தல் ஆணையம் கூறியது. அதோடு எதிர்க்கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சவாலும் விட்டது. இதையடுத்து ஆம் ஆத்மி கட்சி, ஒரு மின்னணு எந்திரத்தை வைத்து, அதில் எப்படி மோசடி செய்ய முடியும் என்பதை நடத்தி காட்டியது. இதை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை.

மின்னணு எந்திரத்தில் முறைகேடு செய்ய முடியாது என்பதை செயல்விளக்கம் மூலம் நிரூபிக்க தயார் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் நாளை (சனிக்கிழமை) அந்த செயல் விளக்கம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் சுமார் 2 மணி நேரம் இந்த செயல் விளக்கம் நடத்தப்படும். இந்த கூட்டத்தில் பங்கேற்கும்படி சவால் விட்ட கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com