தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரி வித்துள்ளார்.
முழுக்க இந்தியாவிலேயே தயாரான சந்திரயான் 2 விண்கலம், கடந்த ஜூலை 22 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. சுற்றுவட்டப்பாதையில் சரியாக சேர்ந்த சந்திரயான் 2-ன் விக்ரம் லேண்டர் விண்கலம், நேற்று முன் தினம் அதிகாலை நிலவில் தரையிறங்குவதென திட்டமிடப்பட்டிருந்தது. நிலவை நோக்கி பயணித்தது லேண்டர்.
தரையிறங்க 2.1 கிலோ மீட்டர் தொலைவே இருந்தபோது, அதிலிருந்து சிக்னல் கிடைக்காமல் போனது. விக்ரம் லேண்டரிலிருந்து எதிர்பார்த்தபடி சிக்னல் கிடைக்கவில்லை என்று இஸ்ரோ தலைவர் சிவன் தழுதழுத்த குரலில் அறிவித்தார்.
இதையடுத்து, லேண்டர் விக்ரமின் சிக்னலை செயல்படுத்துவதற்கான முயற்சிகளை அடுத்த 14 நாட்களுக்கு தொடர்ந்து மேற்கொள்ளப் போவதாகவும், அதில் வெற்றிப் கிடைத்தால் நிலவில் இருந்து தேவையான தகவல்கள் நமக்கு கிடைக்கும் என்றும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டறியப்பட்டது என்று இஸ்ரோ தலைவர் சிவன் இன்று தெரிவித்துள்ளார். நிலவைச் சுற்றிவரும் ஆர்பிட்டர் மூலம், இந்த லேண்டர் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இருந்தாலும் அதிலிருந்து தகவல் தொடர்பு ஏதும் கிடைக்கவில்லை, தொடர்ந்து முயற்சிக்கிறோம் என்று சிவன் தெரிவித்துள்ளார்.
Loading More post
நீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி
அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு
"பத்ம விருதுகளை திருப்பியளிக்கவில்லை!" - இளையராஜா விளக்கம்
வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா!
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?