’எங்களுக்கு ஊக்கம் அளித்திருக்கிறீர்கள்’: ’இஸ்ரோ’வுக்கு நாசா வாழ்த்து

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சந்திரயான் 2 திட்டத்திற்காக இஸ்ரோ மேற்கொண்ட முயற்சிகளுக்கு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா பாராட்டு தெரிவித்துள்ளது. 


Advertisement

விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்க இஸ்ரோ மேற்கொண்ட கடும் முயற்சியை நாசா பாராட்டியுள்ளது. இதுபற்றி ட்விட்டரில், '’விண்வெளி ஆய்வு கடினமானது. நிலவின் தென்பகுதியில் ஆய்வு செய்வதற்கு அனுப்பப்பட்ட சந்திரயான் 2 திட்ட முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள். இதன் மூலம் நீங்கள் எங்களுக்கு ஊக்கமளித்துள்ளீர்கள். எதிர்காலத்தில் சூரியனை ஆராயும் திட்டங்களில் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளது. 


Advertisement

இதே போல் இஸ்ரோவின் முயற்சிகளுக்கும், அர்ப்பணிப்புக்கும் ஆஸ்திரேலிய விண்வெளி ஆராய்ச்சி மையமும் பாராட்டியுள்ளது. விக்ரம் லேண்டர் நிலவுக்கு சில கிலோ மீட்டர் தொலைவில் இருந்ததை சுட்டிக்காட்டியுள்ள ஆஸ்திரேலியா, இஸ்ரோவின் ஆய்வுகள் தொடர வாழ்த்து கூறியுள்ளது. இஸ்ரோவின் முயற்சிக்கு ஐக்கிய அரபு அமீரகம் உறுதுணையாக இருக்கும் என அந்நாட்டின் விண்வெளி ஆய்வு மையம் கூறியுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement