“புற்றுநோய் சிகிச்சைக்கு பசுமாட்டின் சிறுநீர் பயன்படுத்தப்படும்” - மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர்

Proposal-to-include-cancer-in-JAY-under-study--Ashwini-Kumar-Choubey

பசு மாட்டின் சிறுநீர் புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஸ்வினிகுமார் சௌபே தெரிவித்துள்ளார்.


Advertisement

கோவை தனியார் மருத்துவமனையில் அதிநவீன புற்றுநோய்க்கான சிகிச்சை கருவிகளை அஷ்வினி குமார் சௌபே தொடங்கி வைத்தார். புற்றுநோய்க்கு எதிரான போர் என்ற தலைப்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பசு மாட்டின் சிறுநீரில் இருந்து புற்றுநோய்க்கான மருந்து உட்பட பல்வேறு வகையான மருந்துகள் தயாரிக்கப்பட உள்ளதாக கூறினார். 


Advertisement

விரைவில் பசு மாட்டின் சிறுநீர் மருத்துவ பொருளாக அறிவிக்கப்படும் எனவும், அதற்கான ஆய்வுகள் நடந்துவருவதாகவும் அவர் தெரிவித்தார். யோகா, சித்தா, யுனானி போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகளை ஊக்கப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அஸ்வினிகுமார் சௌபே தெரிவித்தார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement