திருமணமான ஒரே வாரத்தில் இளம்பெண் தற்கொலை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னை பல்லாவரத்தில் திருமணமான ஒரே வாரத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அவரது கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


Advertisement

சென்னை பல்லாவரம் அருகேயுள்ள திரிசூலத்தைச் சேர்ந்தவர் மனிஷா. பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த இவர், ஓட்டுநர் அபின்ராஜ் என்பவரை காதலித்துள்ளார். அதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய மனிஷா காதலர் அபின்ராஜூடன் கடந்த ஓராண்டாக வசித்து வந்துள்ளார். அதன் காரணமாக அவர் கருவுற்றதாக தெரிகிறது. இருவருக்கும் இடையே அவ்வப்போது சண்டை ஏற்படும் என சொல்லப்படுகிறது.


Advertisement

அப்படி ஒரு சூழலில் அபின்ராஜ் எட்டி உதைத்ததில் மனிஷா வயிற்றில் இருந்த கரு கலைந்துள்ளது. அதன் பிறகும் இருவரும் ஒன்றாக வசித்து வந்த நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அபின்ராஜை வற்புறுத்தியுள்ளார் மனிஷா. தான் அனிதா என்ற பெண்ணையும் காதலிப்பதாகக் கூறி அவருக்கு அதிர்ச்சி அளித்துள்ளார் அபின்ராஜ். 

பெற்றோரை பிரிந்து வந்துவிட்ட நிலையில் ஆதரவின்றி தவித்த மனிஷா தம்மை திருமணம் செய்து கொள்ளும்படி அபின்ராஜிடம் கெஞ்சியுள்ளார். அவர் காதலிப்பதாகக்கூறிய அனிதா என்பவரிடமும் மனிஷா அழுது மன்றாடியுள்ளார். 


Advertisement

இதனையடுத்து ஒரு வழியாக மனிஷாவை ஆகஸ்ட் 25ஆம் தேதி திருமணம் செய்து கொண்டுள்ளார் அபின்ராஜ். ஆனால் அதன் பிறகும் அனிதா உடனான உறவை அவர் தொடர்ந்ததாக தெரிகிறது. அதனால் மனமுடைந்த மனிஷா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக மனிஷாவின் தந்தை முருகன் புகார் அளித்தார். அதன் பேரில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மனிஷாவின் தற்கொலைக்கு அபின்‌ராஜே காரணம் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement