’முதல்ல ஸ்பெல்லிங்கை கத்துக்கிட்டு வாங்க’: பாக்.அமைச்சரை விளாசிய நெட்டிசன்கள்!

’முதல்ல ஸ்பெல்லிங்கை கத்துக்கிட்டு வாங்க’: பாக்.அமைச்சரை விளாசிய நெட்டிசன்கள்!
’முதல்ல ஸ்பெல்லிங்கை கத்துக்கிட்டு வாங்க’: பாக்.அமைச்சரை விளாசிய நெட்டிசன்கள்!

’சந்திரயான் 2’ திட்டத்தைக் குறை கூறி கருத்துப் பதிவிட்ட பாகிஸ்தான் அறிவியல் அமைச்சரை, நெட்டிசன் விளாசித் தள்ளினர்.

முழுக்‌க இந்தியாவிலேயே தயாரான சந்திரயான் 2 விண்கலம், கடந்த ஜூலை 22 ஆம் தேதி விண்ணில் செலுத்தப் பட்டது. சுற்றுவட்டப்பாதையில் சரியாக சேர்ந்த சந்திரயான் 2-ன் விக்ரம் லேண்டர் விண்கலம், இன்று அதிகாலை நிலவில் தரையிறங்குவதென திட்டமிடப்பட்டிருந்தது. நிலவை நோக்கி பயணித்தது லேண்டர். தரையிறங்க 2.1 கிலோ மீட்டர் தொலைவே இருந்தபோது, அதிலிருந்து சிக்னல் கிடைக்காமல் போனது. விக்ரம் லேண்டரி லிருந்து எதிர்பார்த்தபடி சிக்னல் கிடைக்கவில்லை என்று, இஸ்ரோ தலைவர் சிவன் தழுதழுத்த குரலில் அறிவித்தார்.

இதையடுத்து, பிரதமர் மோடி, கடைசிவரை போராடிய விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்ததோடு, கடைசி நிமிட பின்னடைவு நிரந்தரமானது அல்ல என்‌றார். நிலவைத் தொடும் இந்தியாவின் முயற்சி நிச்சயமாக வெற்றிபெறும் என்று தெரிவித்தார்.

இதையடுத்து, இஸ்ரோவுக்கு ஏராளமானோர் பாராட்டுத் தெரிவித்து வரும் நிலையில், பாகிஸ்தானின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பவத் சவுத்ரி கிண்டல் செய்து ட்வீட் செய்திருந்தார். அதில், ’தயவு செய்து தூங்குங்க... நிலவில் இறங்க வேண்டிய பொம்பை, மும்பையில் இறங்கிவிட்டது’ என்று கூறியிருந்தார். இதற்கு இந்தியர்கள் அவரை கடுமையாகச் சாடியிருந்தனர்.

இதற்கு பதிலளித்த அவர், இந்தியர்கள் என்னைத் திட்டுவதைப் பார்த்தால், சந்திரயான் 2 திட்டத்தை ஏதோ நான் தோல்வியடைய செய்தது போல இருக்கிறது’ என்று கூறினார். இதற்கு பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களும் இந்தியர்களும் அவருக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தனர். அறிவியல் அமைச்சராக இருந்துகொண்டு, அறிவியலை குறை சொல்லலாமா? என்று சிலர் கேட்டிருந்தனர். பாகிஸ்தானியர் ஒருவர் இந்த திட்டத்துக்கு ரூ.900 கோடி செலவானது பற்றி குறிப்பிட்டிருந்தார். 

இதையடுத்து பிரதமர் மோடி, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஆறுதல் கூறும் வீடியோவை பதிவிட்டு ``சாட்டிலைட் குறித்து அரசியல்வாதி போல் இல்லாமல், ஏதோ விண்வெளி வீரர் போல் மோடி பேசுகிறார். ஏழை நாட்டின் 900 கோடி ரூபாயை வீணாக்கியது குறித்து மக்களவை அவரிடம் கேள்வி எழுப்ப வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார். இதற்காகவும் அவரை நெட்டிசன்கள் கலாய்த்தனர்.

இதில், அவர் சேட்டிலைட் என்ற வார்த்தைக்கான ஸ்பெல்லிங்கை தவறாக எழுதியிருந்தார். முதலில் சேட்டிலைட்டுக்கு சரியான ஸ்பெல்லிங்கை தெரிந்துகொண்டு பேசுங்கள் என்று நெட்டிசன்கள் அவரை கலாய்த்து எடுத்துவிட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com