நீச்சல் வீராங்கனைக்கு பாலியல் தொல்லை கொடுத்த பயிற்சியாளர் டெல்லியில் கைது செய்யப்பட்டார்.
கோவா நீச்சல் அணி பயிற்சியாளராக இருந்தவர் சுரஜித் கங்குலி. இவர், தன்னிடம் பயிற்சி பெற்ற 15 வயது வீராங்கனைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வீடியோ, வெளியாகி பரபரப்பானது. பாதிக்கப்பட்ட வீராங்கனையும் சுரஜித்தின், பாலியல் தொல்லை குறித்து வீடியோவில் கூறியிருந்தார்.
இந்த சம்பவம் குறித்து வீராங்கனையின் தந்தை போலீசில் புகார் செய்தார். கோவா போலீசார், பயிற்சியாளர் சுரஜித் கங்குலி மீது பாலியல் வன்கொடுமை உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பாதிக்கப்பட்டவர் சிறுமி என்பதால் போக்சோ சட்டத்தின் படியும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து சுரஜித் கங்குலி தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வந்தனர்.
இதற்கிடையே அவரை, கோவா நீச்சல் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து அம்மாநில நீச்சல் சங்கம் உடனடியாக நீக்கியது. மத்திய விளையாட்டு துறை மந்திரி கிரண் ரிஜிஜூ, சம்பந்தப்பட்ட பயிற்சியாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் டெல்லியில் அவர் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே அவருக்கு இந்திய நீச்சல் சங்கம் நேற்று தடை விதித்தது.
Loading More post
"ஏன் அழுகுறீங்க" - இங்கிலாந்தை மறைமுகமாக கலாயத்த நாதன் லயான்!
தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு- மத்திய அரசு தகவல்
ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் புகார் சிபிசிஐடிக்கு மாற்றம்
''தமிழ் கற்க முயற்சிக்கிறேன்; ஆனால் கற்க முடியவில்லை'' - பிரதமர் மோடி
கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் மு.க.ஸ்டாலின்: விருப்ப மனு தாக்கல்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி