நான்கு பந்துகளில் 4 விக்கெட் - மலிங்கா மிரட்டல் சாதனை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் இலங்கை வீரர் லஷித் மலிங்கா நான்கு பந்துகளில் 4 விக்கெட் சாய்த்துள்ளார்.


Advertisement

இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் மூன்றாவது போட்டி இலங்கையில் பல்லகலேவில் இன்று நடைபெற்று வருகிறது. இதில், முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 8 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 126 ரன்கள் என்ற இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி விளையாடியது.


Advertisement

நியூசிலாந்து அணியில் கொலின் முன்ரோ, திம் செய்ஃபெர்ட் களமிறங்கினர். முதல் ஓவரை வீசிய மலிங்கா 3 ரன்கள் கொடுத்தார். முன்ரோ இரண்டாவது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் விளாசினார். இரண்டு ஓவரில் அந்த அணி 15 ரன்கள் எடுத்திருந்தது.

இதனையடுத்து, ஆட்டத்தின் மூன்றாவது ஓவரை வீசிய மலிங்கா முன்ரோவை கிளீன் போல்ட் ஆக்கினார். இது டி20 கிரிக்கெட்டில் அவரது நூறாவது விக்கெட். அடுத்த மூன்று பந்துகளில் ருதர்போர்டு, கிரான்ஹோம், டெய்லர் ஆகியோரை டக் அவுட் ஆக்கினார். இதன் மூலம் நான்கு பந்துகளில் தொடர்ந்து 4 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார். மீண்டும் ஐந்தாவது ஓவரில் செய்ஃபெர்ட்டையும் ஆட்டமிழக்க செய்தார். மலிங்கா 4 ஓவர்கள் வீசி 6 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் சாய்த்தார். நியூசிலாந்து அணி 88 ரன்களில் ஆட்டமிழந்தது.

         


Advertisement

லஷித் மலிங்கா இதற்கு முன்பாக, 2007 உலகக் கோப்பை தொடரின் தென்னாப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நான்கு பந்துகளில் 4 விக்கெட் சாய்த்திருந்தார். ஆப்கான் வீரர் ரஷித் கானும் டி20 போட்டியில் ஒருமுறை நான்கு பந்துகளில் 4 விக்கெட் எடுத்துள்ளார்.

சர்வதேசப் போட்டிகளில் மலிங்கா இதுவரை 5 முறை ஹாட்ரிக் விக்கெட் சாய்த்துள்ளார். 

 

loading...

Advertisement

Advertisement

Advertisement