இந்தியாவை சுத்தப்படுத்தணுமாம்... இந்தா, சச்சினும் கிளம்பிட்டாருல்ல!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஸ்வாஸ்த் பாரத் எனப்படும் தூய்மை இந்தியா திட்டத்திற்கான தூதராக விரும்புவதாக தெரிவித்துள்ளார் கிரிக்கெட்டின் கடவுள் என வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கர்.


Advertisement

சச்சின் நடித்த அவரது பயோகிராஃபி படமான சச்சின் எ பில்லியன் ட்ரீம் படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், பிரதமர் மோடியை சச்சின் இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்நிலையில், ஸ்வாச் பாரத் எனப்படும் தூய்மை இந்தியா திட்டத்தை பிரபலப்படுத்தி நாடுமுழுவதும் கொண்டு செல்ல விருப்பபடுவதாக சச்சின் தெரிவித்துள்ளார். ’ஸ்வாச் பாரத் திட்டம் மிக முக்கியமானது. இத்திட்டத்திற்கு தூராக விரும்புகிறேன். நாடுமுழுவதும் இத்திட்டத்தை கொண்டு செல்ல வேண்டும். இதற்காக 110 சதவிகிதம் பங்காற்ற தயாராக இருக்கிறேன். இத்திட்டம் இந்தியாவின் உண்மையான வலிமையை உணர்த்தும் என எதிர்ப்பார்க்கிறேன். மோடியை சந்தித்தபோது எனது பட அனுபவங்களைப் பற்றி தெரிவித்தேன். எனது ஸ்வாச் பாரத் விருப்பத்தையும் தெரிவித்துள்ளேன்’ என சச்சின் தெரிவித்தார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement