24 நாட்கள் ஆகியும் கடைமடைக்கு வராத காவிரிநீர் - வேதாரண்யம் விவசாயிகள் கவலை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மேட்டூரில் தண்ணீர் திறக்கப்பட்டு 24 நாட்கள் ஆகியும் கடைமடைப் பகுதிக்கு அடப்பாற்றில் தண்ணீர் வராததால் வேதாரண்யம் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


Advertisement

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் கடைமடைப் பாசனப்பகுதிக்கு அரிச்சந்திரா நதியிலிருந்து பாமிணி அருகே பிரியும் அடப்பாறு சாலக்கடை, சாக்கை வழியாக உம்பளச்சேரி பகுதிக்கு வருகிறது. கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி மேட்டூரில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீரை நம்பி துளசாபுரம் சாக்கை, உம்பளச்சேரி, கரியாப்பட்டினம் புல்வெளி போன்ற கடைமடை பாசனப் பகுதியில் விவசாயிகள் நேரடி நெல்விதைப்பு மூலம் சம்பா சாகுபடி செய்து வருகின்றனர்.

                        


Advertisement

ஆனால் மேட்டூரில் தண்ணீர் திறக்கப்பட்டு 24 நாட்களாகியும் வெண்ணாறு கோட்டத்தை சேர்ந்த அடப்பாறு, உம்பளச்சேரி வடக்குராஜன் வாய்கால், மகாராஜபுரம் தெற்கு ராஜன் வாய்க்கால் போன்ற பாசன வாய்க்கால்களில் இது வரை காவிரி தண்ணீர் வரவில்லை. இதனால், அடப்பாற்றின் மூலம் பாசன வசதி பெறும் சுமார் 4 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

காவிரியில் இரண்டு மாதம் தாமதமாக தண்ணீர் திறந்ததால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது சம்பா சாகுபடியாவது காலத்தில் செய்யலாம் என எதிர் பார்த்திருந்த விவசாயிகள் காவிரி தண்ணீர் வருவதில் தாமதம் ஏற்படுவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement