விமான நிலையங்களில் பிடிபட்ட ரூ.1.73 கோடி கடத்தல் தங்கம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கோவை மற்றும் திருச்சி விமான நிலையங்களில் ஒரு கோடியே 73 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 


Advertisement

துபாயிலிருந்து வரும் விமானத்தில் கடத்தல் தங்கம் கொண்டுவரப்படுவதாக கோவை விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், ஏர் அரேபியா விமானத்தில் துபாயிலிருந்து ஷார்ஜா வழியாக கோவை விமான நிலையம் வந்த கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த இரண்டு பயணிகளிடமிருந்து 42 லட்சத்து 15 ஆயிரத்து 258 ரூபாய் மதிப்பிலான ஒரு கிலோ தங்கம் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. 


Advertisement

தங்கத்தை கடத்தி வந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேபோன்று கோலாலம்பூரிலிருந்து துபாய்-கொழும்பு வழியாக திருச்சி வந்தடைந்த இலங்கை ஏர்லைன்ஸ் விமானத்திலிருந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஒரு கோடியே 31லட்சத்து 20 ஆயிரத்து 707 ரூபாய் மதிப்பிலான, 2 கிலோ 382 கிராம் தங்கத்தை மலக்குடலில் மறைத்து எடுத்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement