நிலவில் சந்திரயான் லேண்டரை தரையிறக்குவதற்கான இறுதிக் கட்டப் பணிகள் நிறைவடைந்துவிட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
நிலவின் தென்துருவத்தை ஆய்வுசெய்ய கடந்த ஜுலை 22ஆம் தேதி சந்திரயான் 2 விண்கலத்தை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டர் பிரிந்து நிலவின் அருகில் சுற்றிவருகிறது. இது நாளை அதிகாலை 1.30 மணிக்கு எந்நாட்டின் விண்கலமும் சென்றிராத நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்க உள்ளது.
இதை பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமையகத்தில் இருந்து பிரதமர் மோடி நேரடியாக பார்வையிட உள்ளார். அவரு டன் அமர்ந்து நேரில் காட்சியை காண மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் விநாடி வினா போட்டி நடத்தப்பட்டது. இதில் தேர்வு செய்யப்பட்ட தமிழகத்தின் சேர்ந்த 2 மாணவர்கள், புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவர் உள்பட 70 மாணவர்கள், பிரதமர் மோடியுடன் அமர்ந்து ’சந்திரயான் 2’ நிலவில் தரையிறங்குவதை காண்கின்றனர். இந்நிலையில், லேண்டரை தரையிறக் குவதற்கான இறுதிக் கட்டப் பணிகள் நிறைவடைந்துவிட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
புதிய தலைமுறைக்கு தொலைபேசி வாயிலாக பிரத்யேகமாக பேட்டி அளித்த அவர், கூறும்போது, சந்திரயான்-2 விண்கலத் தின் விக்ரம் லேண்டர் நள்ளிரவு 1.30 மணியளவில் நிலவில் தரையிறங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான இறுதிக் கட்டப் பணிகள் முடிவடைந்துவிட்டன. சந்திரயான்-2 திட்டத்தில் இனி எந்த தவறும் நடக்காது. உலகமே எதிர்பார்த்து காத்தி ருக்கும் சந்திரயான்-2 திட்டம் வெற்றியடையும்’’ என்றார்
Loading More post
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
“30 தொகுதியில் வெற்றி, இல்லையேல் மேடையிலேயே தற்கொலை” திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் ஆவேச பேச்சு
பருவம் தாண்டி ஓயாமல் கொட்டிய கனமழை: நீரில் மூழ்கிய பயிர்களால் கண்ணீர் கடலில் விவசாயிகள்!
“அண்ணன்-தம்பி பிரச்னைகள் இருந்தால் பேசி தீர்ப்போம்”- ஓபிஎஸ்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை: நாளை நேரில் ஆஜராகுகிறாரா ரஜினி?
அர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன?!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்