சேலம் அருகே கல்லூரி மாணவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில், கொலையாளிகளைக் கைது செய்யக்கோரி போராட்டம் நடந்தது.
சேலம் மல்லூர் அருகே நாழிக்கல்பட்டி பகுதியில் விநாயகர் சிலை வைப்பது தொடர்பாக, அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் திலீப்குமாருக்கும், அவரது நண்பர்களான சரவணன், சரவணக்குமார், திருநாவுக்கரசு ஆகியோருக்கும் பிரச்னை இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அம்மூவரும் திலீப்பை கத்தி, இரும்புக்கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் இருந்த சரண்குமார் என்பவரும் படுகாயமடைந்தார்.
இதனையடுத்து திலீப்பின் உடல் உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காயம டைந்த சரண்குமார் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தைக் கண்டித்து இறந்தவரது உறவினர்கள் மருத்து வமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய காவலர்கள், திருநாவுக்கரசு மற்றும் சரவணன் ஆகியோரைக் கைது செய்திருப்பதாகக் கூறினர். கொலையில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தியவர்கள், போராட்டத்தைக் கைவிட்டனர்.
Loading More post
பருவம் தாண்டி ஓயாமல் கொட்டிய கனமழை: நீரில் மூழ்கிய பயிர்களால் கண்ணீர் கடலில் விவசாயிகள்!
“அண்ணன்-தம்பி பிரச்னைகள் இருந்தால் பேசி தீர்ப்போம்”- ஓபிஎஸ்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை: நாளை நேரில் ஆஜராகுகிறாரா ரஜினி?
ஜனவரி 21-ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஊழியர் மரணம்: காரணம் வேறு என்கிறது உ.பி அரசு
அர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன?!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்