விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கு வீரர்கள் தேர்வு

Players-selected-for-a-mission-to-send-humans-into-space

இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தின்கீழ் விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் தேர்வு தொடங்கியுள்ளது.


Advertisement

2022-ஆம் ஆண்டு விண்ணுக்கு மனிதனை அனுப்பும் இஸ்ரோவின் ககன்யான் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இதற்காக விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் தேர்வு தொடங்கியுள்ளது. தேர்வு செய்யப்பட்ட வீரர்களுக்கான முதல்கட்ட பரிசோதனை நிறைவடைந்திருப்பதாக விமானப்படை அறிவித்துள்ளது. மிகத் தீவிரமான உடல்திறன் தேர்வு, மருத்துவம், மனோதிடம் உள்ளிட்ட சோதனைகள் நடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.


Advertisement

மொத்தம் 30 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சிக்காக ரஷ்யா அனுப்பப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக பெங்களூருவில் இன்ஸ்டியூட் ஆப் ஏரோ ஸ்பேஸ் மெடிசன்ஸ் நிறுவனத்தில் பரிசோதனைகள் நடந்தன. தேர்வு செய்யப்படும் 30 வீரர்களில் இருந்து 3 பேர் மட்டுமே இறுதியாக தேர்வு செய்யப்பட்டு விண்வெளிக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

Related Tags : விண்வெளிஇஸ்ரோISROSpace
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement