’எனை நோக்கி பாயும் தோட்டா’ ரிலீஸ் எப்போது? தயாரிப்பாளர் அறிக்கை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பைனான்ஸ் பிரச்னை தீர்க்கப்படாததால், இன்று வெளியாவதாக இருந்த தனுஷ் நடித்துள்ள ’எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் ரிலீஸ் ஆகவில்லை. 


Advertisement

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், சசிகுமார், வேல ராமமூர்த்தி உட்பட பலர் நடித்துள்ள படம், ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. தர்புகா சிவா இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்டான நிலையில், படம் நீண்ட நாட்களாக ரிலீஸ் ஆகாமல் இருந்து வருகிறது. பைனான்ஸ் பிரச்னை காரணமாக ரிலீஸ் ஆவதில் சிக்கல் நீடித்து வருவதாகக் கூறப்படுகிறது.


Advertisement

இந்நிலையில் இந்தப் படத்தின் புதிய ட்டைலரை வெளியிட்ட படக்குழு, படம் இன்று (6ஆம் தேதி) வெளியாகும் என்று அறிவித்திருந்தது. இதையடுத்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இந்தப் படத்தை எதிர்நோக்கி பதிவுகளையும் மீம்ஸ்களையும் பதிவிட்டனர். இந்நிலையில் பிரச்னை தீர்க்கப்படாததால், படம் இன்று ரிலீஸ் ஆகவில்லை. 

இதுபற்றி தயாரிப்பாளர் ’எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ்’ மதன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ படத்தை இன்று எங்களால் வெளியிட முடியவில்லை. பெருமுயற்சிகள் செய்து படத்தை வெளியிட முடியும் என்ற உறுதியோடு பணிபுரிந்த எங்களுக்கும் இது ஏமாற்றம். அதற்காக வருந்துகிறோம். விரைவில் அடுத்த சில நாட்களில் வெளியிட உழைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த தாமதத்தால், ரசிகர்களுக்கு ஏற்படும் ஏமாற்றம், விரக்தியையும் அதன் காரணமாக நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களையும் அறிவோம். உங்கள் கருத்துக்களையும் கணக்கில் கொண்டே எங்களது பயணமும் அமைந்துள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். இலக்கை எட்டும் நிலையில் நாங்கள் வேண்டுவது உங்கள் அன்பையும் ஆதரவையும் மட்டுமே’ என்று கூறப்பட்டுள்ளது. 


Advertisement

’எனை நோக்கி பாயும் தோட்டா’ ரிலீஸ் ஆகாததால், சசி இயக்கத்தில் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்துள்ள ’சிவப்பு மஞ்சள் பச்சை’ படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement