தமிழிசை சவுந்தரராஜன் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், கனிமொழி எம்.பி.க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்நிலையில் கனிமொழியின் வெற்றியை செல் லாது என அறிவிக்கக் கோரி, உயர்நீதிமன்றத்தில் தமிழிசை வழக்குத் தொடர்ந்திருந்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், ’சிங்கப்பூர் பிரஜையான கனிமொழியின் கணவர் அரவிந்தனின் வருமானத்தைப் பற்றி வேட்பு மனுவில் குறிப்பிடவில்லை, அதை மறைத்தது தவறு. வேட்புமனுக்கள் பரிசீலனையின்போது, கனிமொழியின் வேட்புமனு குறித்து எனது தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. அதைத் தேர்தல் அதிகாரி ஏற்கவில்லை. இதனால் கனிமொழியின் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும்’ என கூறியிருந்தார்.
இந்த வழக்கு, விசாரணைக்கு இன்று வந்தது. விசாரித்த நீதிமன்றம், கனிமொழிக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
Loading More post
திருச்சி: மழைநீரில் மூழ்கி 50,000 ஏக்கர் நெற்பயிர் நாசம்; இழப்பீடு வழங்க கோரிக்கை
’’நான் நிச்சயம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வேன்’’ - முதல்வர் பழனிசாமி
கொரோனா தடுப்பூசிக்கான ஒப்புதல் - ஏற்புப் படிவத்தில் கோவாக்சின் குறித்து இருப்பது என்ன?
தமிழகத்தில் முதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் மதுரை மருத்துவர்!
"இரண்டும் பாதுகாப்பானவை; வதந்திகளை நம்பாதீர்! - கொரோனா தடுப்பூசி பணியை தொடங்கிவைத்த மோடி
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு