உத்தரகாண்டில் ''பள்ளத்தில் கவிழ இருந்த பேருந்தை தடுத்து நிறுத்தி பயணிகளை யானை ஒன்று காப்பாற்றியது'' என்ற தலைப்புடன் பள்ளத்தை நோக்கிச் செல்லும் பேருந்தை யானை ஒன்று முன்னால் நின்று தடுத்து நிறுத்துவது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது. அந்த புகைப்படத்தை பலரும் பகிர்ந்து நெகிழ்ச்சியாய் பதிவிட்டு வந்தனர்.
ஆனால் அந்த சம்பவம் இந்தியாவிலேயே நடக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. கடந்த 2007ம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட புயலின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்று உறுதியாகியுள்ளது. மேலும் அது சேற்றில் சிக்கிய பேருந்தை பயிற்சி பெற்ற யானை ஒன்று மீட்ட புகைப்படம் என்றும் மற்றபடி இந்தியாவுக்கும் இந்த புகைப்படத்துக்கும் தொடர்பில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படத்தை யாரோ தவறான தகவலுடன் பகிர, அதன் உண்மைத்தன்மை அறியாமல் பலரும் அதனை பகிர்ந்துள்ளனர். சமூக வலைதளங்களில் அதிக அளவில் போலி புகைப்படங்களும், தகவல்களும் பரவுகிறது என்றும், பயனாளர்கள் தான் உறுதித்தன்மையை அறிந்து செயல்படுவது தேவையற்ற குழப்பத்தை தவிர்க்கும் என்றும் சமூக வலைதள நிறுவனங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
Loading More post
புதுச்சேரி: காங்கிரசில் இருந்து அமைச்சர் நமச்சிவாயம் தற்காலிக நீக்கம்!
“சீனா என்ற வார்த்தையை சொல்லக்கூட தைரியமற்றவர் பிரதமர் மோடி” - ராகுல் காந்தி
ராமர் பாலம் எப்போது, எப்படி உருவானது? - கடலுக்கடியில் ஆய்வு செய்ய மத்திய அரசு ஒப்புதல்!
திமுக ஆட்சி அமைந்ததும் 100 நாட்களில் மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு : மு.க.ஸ்டாலின்
சிக்கிம் எல்லையில் சீன ராணுவம் ஊடுருவல் முயற்சி: இந்திய ராணுவம் முறியடிப்பு
PT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன்? - நேர்காணலில் முதல்வர் விளக்கம்
PT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!