JUST IN

Advertisement

தினகரன் மீதான விசாரணையை வேகப்படுத்த வேண்டும்: ஓபிஎஸ்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

டிடிவி தினகரன் மீதான விசாரணையைத் துரிதப்படுத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.


Advertisement

டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சசிகலா குடும்பத்தை வெளியேற்றினால்தான் இரு அணிகளின் இணைப்பில் முடிவு ஏற்படும் என்று கூறினார். கட்சியின் பொருளாளராக தாம்தான் செயல்பட முடியும் எனவும், திண்டுக்கல் சீனிவாசன் கட்சிப்பணத்தைக் கையாள உரிமை இல்லை என்றும் அவர் கூறினார். இரு அணி இணைப்பு குறித்த பேச்சு, யாரால் தடைப்படுகிறது என்று மக்களுக்குத் தெரியும் என்றும் அவர் கூறினார்.

இரட்டை இலை சின்ன விவகாரம் தொடர்பாக டிடிவி தினகரன், சுகேஷ் ஆகியோர் மீதான விசாரணையைத் துரிதப்படுத்த வேண்டும் என்றும் ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது குறித்த விசாரணையையும் துரிதப்படுத்த வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியதாகவும் ஓபிஎஸ் தெரிவித்தார்.


Advertisement

ரஜினி அரசியலுக்கு வருவது தொடர்பான பிரச்னை குறித்துப் பேசிய அவர், ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். யார் வந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டியவர்கள் மக்கள்தான் என்று கூறினார்.

Related Tags : ttv dhinakaran ops
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement