அமெரிக்க ஓபன் டென்னிஸ் : 100 வெற்றிகளை ருசித்த செரீனா

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் காலிறுதியில் வெற்றி பெற்றதன் மூலம் 100 வெற்றிகளை வசப்படுத்தியுள்ளார்.


Advertisement

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் சீன வீராங்கனை வாங் கியாங்-ஐ எதிர்கொண்ட செரீனா 44 நிமிடங்களில் 6-1, 6-0 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இந்த வெற்றி மூலம் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் 100வது வெற்றியை செரீனா பெற்றுள்ளார். 


Advertisement

இதுவரை அவர் பங்கேற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று மற்றும் இரண்டாவது சுற்றில் தலா 19 வெற்றிகளையும், மூன்றாவது சுற்றில் 18 முறை வெற்றி பெற்றுள்ளார். நான்காவது சுற்றில் 16 முறை செரீனா வில்லியம்ஸ் வெற்றி பெற்றிருக்கிறார். காலிறுதிப் போட்டியில் 13 முறையும், அரையிறுதியில் ஒன்பது முறையும் செரீனா வெற்றி பெற்றுள்ளார். இதுவரை அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் ஆறு முறை வெற்றி பெற்றுள்ளார். தற்போதைய வெற்றி மூலம் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் 100ஆவது வெற்றியை செரீனா கண்டுள்ளார். 

loading...

Advertisement

Advertisement

Advertisement