“பொருளாதாரத்தில் கவனம் செலுத்துங்கள்” - வைரலான பாக்., இளைஞரின் பேச்சு 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பொருளாதாரத்தில் இந்தியாவை விட பாகிஸ்தான் மேம்படும் வரை, காஷ்மீர் பிரச்னையில் உலக நாடுகளின் ஆதரவை பெற முடியாது எ‌ன அந்‌நாட்டை சேர்ந்த‌ வாலிபர் தெரிவித்த கருத்து சமூக வலைத்தளங்களில் கவ‌னத்தை பெற்றுள்ளது.‌


Advertisement

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட‌‌ விவகா‌ரத்திற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதற்குப் பதிலளித்த இந்தியா, காஷ்மீர் விவகாரம் உள்நாட்டு விவகாரம் என்று பதில் அளித்தது. இதனை ஏற்க மறுத்த பாகிஸ்தான் இந்த விவகாரத்தை ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலுக்கு எடுத்து சென்றது. 


Advertisement

எனினும் பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தானின் முயற்சி தோல்வியடைந்தது. இதனையடுத்து காஷ்மீர் விவகாரத்தை இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கருத்து தெரிவித்தன.

இந்நிலையில் பாக். அ‌ரசு, காஷ்மீருக்காக குரல் எழுப்ப அந்நாட்டு மக்களிடம் பரப்புரை செய்து‌ வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள தனியார் தொலைக்‌காட்சி நடத்திய கருத்துக்கேட்பில், காஷ்மீர் விவகாரம் குறித்து வாலிபர் ஒருவர் பேசியது அதிக ஈர்ப்பை பெற்றுள்ளது. 


Advertisement

பொருளாதாரத்தில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தும் போது மட்டுமே அந்நாட்டின் குரலை உலக நாடுகள் கேட்குமென வாலிபர் கூறி இருக்கிறார். பாகிஸ்தான்‌ பிரத‌மர் காஷ்மீர் பிரச்னையில் கவனம் செலுத்துவதை காட்டிலும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட வேண்டுமெனவும் அந்த வாலிபர் தெரிவித்துள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement