“நீதித்துறை குறித்து பெருமிதம் கொள்கிறேன்” - ஷமி மனைவி ஹசின் 

Hasin-Jahan-Cricketer-Mohd-Shami-s-wife-on-arrest-warrant-issued-against-Shami-in-domestic-violence-case

நீதித்துறை குறித்து பெருமிதம் கொள்கிறேன் என இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் மனைவி தெரிவித்துள்ளார். 


Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீது அவரது மனைவி ஹசின் ஜஹான் கடந்த ஆண்டு பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். முதலில் ஷமியின் மனைவி அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் ஷமிக்கு பல்வேறு பெண்களுடன் தொடர்பு உள்ளதாகவும் அதை தான் தட்டிக் கேட்கும்பட்சத்தில் அடித்து துண்புறுத்துவதாகவும் புகார் தெரிவித்திருந்தார். அத்துடன் ஷமி பல்வேறு பெண்களுடன் இருக்கும் புகைப்படங்களையும் அவர் அனுப்பிய மெசேஜ்களின் தொகுப்புகளையும் வெளியிட்டு பகீர் கிளப்பினார். 


Advertisement

அத்துடன் கொல்கத்தா காவல்நிலையத்தில் ஷமியின் மனைவி புகாரும் அளித்திருந்தார். இந்தக் குற்றச்சாட்டுகளை ஷமி மறுத்திருந்தார். அதன்பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

இதுதொடர்பான வழக்கு அலிபூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, ஷமி மற்றும் அவரது சகோதரர் ஹசித் அகமதுவிற்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் 15 நாட்களுக்குள் ஷமி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. 


Advertisement

இந்நிலையில், இதுகுறித்து பேசிய ஷமியின் மனைவி ஹசின் ஜஹான், “நீதித்துறை குறித்து பெருமிதம் கொள்கிறேன். நான் ஒரு வருடத்திற்கும் மேலாக நீதிக்காக போராடுகிறேன் எனபதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். ஒரு பெரிய கிரிக்கெட் வீரர் என்பதால் அனைவரையும் விட தான் மிகவும் சக்திவாய்ந்தவர் என்று ஷமி நினைக்கிறார்” எனத் தெரிவித்தார். 

இதனிடையே இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் முகமது ஷமி, தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறார். இந்த டெஸ்ட் தொடர் இன்றுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement