பழனி பஞ்சாமிர்தம் கடை உரிமையாளர்களிடம் நடத்திய சோதனையில் 56 கிலோ தங்கம், 2 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பழனி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற சித்தனாதன், கந்தவிலாஸ் விபூதி, பஞ்சாமிர்தம் நிறுவனங்கள் வரிஏய்ப்பு செய்துள்ளதாக புகார் எழுந்தது. இதனையடுத்து கடந்த 29ஆம் தேதி முதல் வரிமான வரித்துறையினர் கடை உரிமையாளர்களின் வீடுகள், குடோன்கள், அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டனர். 5 நாட்களாக சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சோதனையின் முடிவில் கணக்கில் வராத 56 கிலோ தங்கம், 2 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர். முன்னதாக, 90 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக தகவல் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.
Loading More post
'பருவமழை பொய்க்காது!' - கொரோனா பேரிடர் காலத்தில் விவசாயிகள் மீண்டும் கைகொடுக்க வாய்ப்பு
பாகிஸ்தானில் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப், யூட்யூப் சேவை தற்காலிக முடக்கம்!
கொரோனா 2ஆம் அலை தீவிரம்; ப்ளஸ் 2, கல்லூரி தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும்: சீமான் கோரிக்கை
"நாள் ஒன்றுக்கு 15 காவலர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்” - சென்னை காவல் ஆணையர்
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு!
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
டாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்!
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்