சந்திரயான்-2 ஆர்பிட்டரிலிருந்து வெற்றிகரமாக பிரிந்த லேண்டர் ‘விக்ரம்’ 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நிலவை சுற்றிவரும் சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டரிலிருந்து லேண்டர் ‘விக்ரம்’ வெற்றிகரமாக பிரிந்தது.


Advertisement

நிலவின் தென் துருவப் பகுதியை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ கடந்த ஜூலை 22ஆம் தேதி சந்திரயான் 2 விண்கலத்தை ஏவியது. திட்டமிட்டப்படி இந்த விண்கலம் பூமியை சுற்றி வந்த நிலையில் அதன் வேகம் அதிகரிக்கப்பட்டு படிப்படியாக பாதை திருப்பிவிடப்பட்டது. பூமியில் இருந்து அதிக தொலைவு கொண்ட பாதைக்கு கொண்டு செல்லப்பட்ட சந்திரயான் 2 விண்கலம், பின்னர் நிலவின் பாதைக்கு திருப்பி விடப்பட்டது. 


Advertisement

தொடர்ந்து, சந்திரயானின் வேகம் படிப்படியாக குறைக்கப்பட்டு சுற்றுவட்டப்பாதைக்கு மாற்றப்பட்டது. ஐந்தாவது முறையாக நேற்று மாலை 6:21 மணிக்கு மீண்டும் பாதை வெற்றிகரமாக மாற்றியமைக்கப்பட்டது. 52 விநாடிகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை நிலவிலிருந்து குறைந்தபட்சம் 119 கிலோ மீட்டர் மற்றும் அதிகபட்சம் 127 கிலோமீட்டர் என்ற சுற்றுவட்டப் பாதையில் செலுத்தப்பட்டுள்ளது. 

சந்திரயான் 2 திட்டத்தில் இந்தப் பாதை மாற்றம் மிக முக்கியமான மைல்கல். இந்நிலையில் இன்று பிற்பகல் ஆர்பிட்டரில் இருந்து விக்ரம் லேண்டரை பிரிக்கும் பணிகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். அதன்படி ஆர்பிட்டரிலிருந்து லேண்டர் ‘விக்ரம்’  வெற்றிகரமாக பிரிந்து சென்றது.


Advertisement

இதன் பின்னர் விக்ரம் லேண்டரை தரையிறக்க தேவையான இரண்டு முக்கிய பணிகள் நாளை 3ம் தேதி காலை 9 மணி முதல் 10 மணிக்குள்ளும், மற்றும் நாளை மறுநாள் 4ம் தேதி காலை 3 மணி முதல் 4 மணிக்குள்ளும் மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement