கட்டாய மதமாற்றம்: பாகிஸ்தானுக்கு எதிராக டெல்லியில் சீக்கியர்கள் போராட்டம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பாகிஸ்தானில் சீக்கிய பெண்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதைக் கண்டித்து, டெல்லியில் சீக்கியர்கள் போராட்டம் நடத்தினர்.


Advertisement

பாகிஸ்தானின் நன்கனா சாஹிப் பகுதியைப் சேர்ந்த 19 வயது சீக்கிய பெண் ஒருவர் கடத்தி கட்டாயமாக இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்பட்டதாக புகார் எழுந்தது. இதில், பாகிஸ்தான் பிரதமர் தலையிட வேண்டும் என்று அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர். கட்டாய மதமாற்றத்துக்கு பாகிஸ்தானில் உள்ள சீக்கிய அமைப்புகளும் இந்தியா வில் உள்ள சீக்கிய அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்தன.


Advertisement

இந்நிலையில், பாகிஸ்தானில் கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சீக்கியர்கள் டெல்லியில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான சீக்கிய இளைஞர்கள், பெண்கள் கலந்துகொண்டு பாகிஸ்தானுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். கட்டாய மதமாற்றம் தடுக்கப்பட வேண்டும் என்றும், பாகிஸ்தானில் சிறுபான்மையரான சீக்கியர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் எழுதப்பட்ட பதாகைகளை கையில் பிடித்தபடி அவர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர். 

loading...

Advertisement

Advertisement

Advertisement