பார்முலா 2 கார் ரேஸில் பயங்கர விபத்து: இளம் வீரர் உயிரிழப்பு

Anthoine-Hubert-killed-in-F2-accident-at-Spa

பார்முலா 2 கார் ரேஸில் ஏற்பட்ட விபத்தில், பிரபல கார் பந்தய வீரர் அந்தோய்ன் ஹூபர்ட் பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 22.


Advertisement

பார்முலா 2 கார் பந்தயம் பெல்ஜியத்தில் உள்ள ஸ்பா- ஸ்டாவோல்ட்டில் நடந்து வந்தது.  ஏராளமான வீரர்கள் பங்கேற்ற இந்தப் போட்டியில் பிரான்ஸை சேர்ந்த அந்தோன் ஹுபர்ட் (Anthoine Hubert) என்ற வீரரும் கலந்துகொண்டார். பல்வேறு கார் பந்தய போட்டிகளில் கலந்துகொண்டு வென்றுள்ள இவரது கார், போட்டியின் போது, எதிர்பாராமல் விபத்தில் சிக்கியது.


Advertisement

உருண்டு உருண்டு சென்ற அந்த காருக்குள் சிக்கிக்கொண்ட ஹூபர்ட், பலத்த காயமடைந்தார். உடனடியாக மருத்துவம னைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த கார் விபத்தில் அமெரிக்க கார் பந்தய வீரரும் படுகாயமடைந்தார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதனால், அடுத்து நடக்க இருந்த கார் பந்தயங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரேஸில் நடந்த விபத்தில் இளம் வீரர் ஒருவர் உயிரிழந்திருப்பது, கார் பந்தய வீரர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஹூபர்ட், மறைவுக்கு பார்முலா போட்டியை நடத்தும் அமைப்பும் வீரர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement