பாதுகாப்பு குறைபாட்டால் ப்ளே ஸ்டோரிலிருந்து ‘கேம் ஸ்கேனர்’ நீக்கம் 

CamScanner-removed-from-Google-Play-Store

கூகுளின் ப்ளே ஸ்டோர் ஆண்டிராய்டுகளுக்கான செயலிகளை வழங்கி வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக சில செயலிகளை அவ்வப்போது ப்ளேஸ்டோர் நீக்கியும் வருகிறது. இந்நிலையில் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து கேம்ஸ்கேனர் செயலி நீக்கப்பட்டுள்ளது.


Advertisement

100 மில்லியனுக்கும் அதிகமானோரால் தரவிறக்கம் செய்யப்பட்ட பிரபல செயலி கேம்ஸ்கேனர். இந்தச் செயலியை பயன்படுத்தி ஸ்கேன் செய்யப்படும் புகைப்படங்களை பிடிஎஃப் ஆக எளிதாக மாற்றலாம். பலருக்கும் பெரிய அளவில் பயன்பட்ட இந்தச் செயலி மீது மால்வேர் (வைரஸ்) தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்பு தொடர்பான ஆராய்ச்சியாளர்கள் கூகுளுக்கு எச்சரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து கேம்ஸ்கேனர் செயலியை கூகுள் நீக்கியுள்ளது. 


Advertisement

மால்வேர் தாக்குதல் ஆண்ட்ராய்டு வெர்ஷனில் மட்டுமே இருப்பதால் iOS வெர்ஷனில் கேம்ஸ்கேனர் வழக்கம் போல் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ''போன் பிடிஎஃப் கிரியேட்டர்'', ''கேம்ஸ்கேனர் - ஸ்கேனர்'' என்ற வேறு வேறு பெயர்களிலும் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்த ஆராய்ச்சியாளர்கள், மில்லியன் கணக்கான செயலிகளை கூகுள் தினமும் கவனிப்பது கடினமான ஒன்றாக இருப்பதாக தெரிவித்தனர்.

பாதுகாப்பு அம்சங்களில் கவனம் செலுத்தும் கூகுள், பாதுகாப்பு குறைபாடுகள் கொண்ட செயலிகளை அதிரடியாக நீக்கி வருகிறது. சமீபத்தில் சூப்பர் செல்ஃபி, சிஓஎஸ் கேமரா, பாப் கேமரா, மற்றும் ஒன் ஸ்ட்ரோக் லைன் பஸில் உள்ளிட்ட 80க்கும் அதிகமான செயலிகளை கூகுள் நீக்கியது குறிப்பிடத்தக்கது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement