பிரதமர் மோடி அறிவித்த நீருக்கான ‘நல் சே ஜல்’ திட்டத்தில் ஒரு நாளைக்கு ஒருவருக்கு 55 லிட்டர் நீர் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் முதல் பட்ஜெட்டில் நீர் சேமிப்பு மற்றும் கிராமபுறங்களிலுள்ள அனைவருக்கும் குழாய் மூலம் நீர் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கு ‘நல் சே ஜல்’ என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இதன்மூலம் கிராமப்புறங்களிலுள்ள அனைத்து மக்களுக்கும் 2024ஆம் ஆண்டிற்குள் குழாய் மூலம் நீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் இறுதி வடிவத்தை அதிகாரிகள் தற்போது தயாரித்து வருகின்றனர். இந்தச் சூழலில் இத்திட்டம் வாயிலாக குழாய் மூலம் ஒருநாளைக்கு ஒருவருக்கு 43-55 லிட்டர் வரை நீர் தர திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. நீர் பற்றாக்குறை நேரங்களில் அதிகபட்சமாக 43 லிட்டர் நீரை அளிக்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் இந்த நீரை மக்களின் வீடுகளில் அல்லது அவர்களின் வீட்டிலிருந்து 100 மீட்டர் தூரத்தில் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அத்துடன் பிரதமர் ‘தூய்மை இந்தியா’ திட்டத்திற்கு என்று தனி ‘சுவச் பாரத் கோஷ்’ நிதி அமைக்கப்பட்டது போல இந்தத் திட்டத்திற்கும் தனியாக நிதி ஒன்று உருவாக்கப்பட உள்ளது தெரியவந்துள்ளது. இத்திட்டத்திற்காக நாட்டிலுள்ள அனைத்து நீர் நிலைகளை ஆய்வு செய்யும் பணிகளை வரும் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை செய்ய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை பயன்படுத்த மத்திய அரசு முடிவு எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
நீருக்காக புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஜல்சக்தி அமைச்சகம் இந்த நிதியாண்டில் 19.5 சதவிகித கிராமப் புற மக்களுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்க திட்டமிட்டுள்ளது. 2018-19ஆம் ஆண்டு தேசிய கிராமப்புற குடிநீர் திட்டத்தின் மூலம் வெறும் 18.2% சதவிகித கிராமப்புற மக்களுக்கு மட்டும் குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Loading More post
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி