பால் விலை உயர்வு எதிரொலி: மின் கட்டணத்தை உயர்த்த தயங்கும் தமிழக அரசு?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பால் விலை உயர்வுக்கு எழுந்த எதிர்ப்புகள் காரணமாக மின் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு தயங்கி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


Advertisement

தமிழகத்தில் 2012ல் தான், 37 சதவீத மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. பின், வருவாய் தேவை அறிக்கை சமர்ப்பிக்காத நிலையில், 2014ல், ஆணையமே, 15 சதவீத கட்டணத்தை உயர்த்தியது. 2014க்கு பின், ஐந்து ஆண்டுகளாக கட்டணம் உயர்த்தப்படவில்லை என்பதால், விரைவில், மின் கட்டண உயர்வு அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, மின் வாரிய நிதி நிலைமை மோசமாக உள்ளதாக கூறப்படுகிறது. அதனால், மின் கட்டணம் சற்றே கூடுதலாக அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.


Advertisement

இதனிடையே, தமிழக மின் வாரியத்தின் நிதி நெருக்கடியை சமாளிக்க, மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து, அரசும், மின்சார ஒழுங்கு முறை ஆணையமும் ஆலோசித்து வருகின்றன. கடந்த வாரம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆனால், அந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் மின் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை.

ஆவின் மூலம் விற்பனை செய்யப்படும் பாலின் விலையை தமிழக அரசு சமீபத்தில் உயர்த்தியது. பாலை விலை உயர்வுக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த எதிர்ப்புகள் காரணமாக மின் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு தயங்கி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மின்சார துறையில் ஏற்படும் பற்றாக்குறையை ஈடுகட்ட, மின் கட்டணத்தை உயர்த்த அரசு முடிவு செய்வது வழக்கமான ஒன்றுதான். 

   


Advertisement

மத்திய அரசின் உதய் மின் திட்டத்தின் தமிழக அரசு 2017ஆம் ஆண்டு ஜனவரியில் இணைந்தது. 2017-18 ஆம் ஆண்டி நிதிப் பற்றாக்குறை ரூ7,760 கோடியாக இருந்தது. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 80 சதவீதம் அதிகம். 2018-19 ஆண்டின் நிதிப் பற்றாக்குறை இன்னும் கணக்கீடு செய்யப்படவில்லை. இருப்பினும் அது 2017-18 ஆம் ஆண்டை விட அதிகமாகதான் இருக்கும் என மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். 

மின் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு ஒப்புதல் அளித்தாலும், அதனை நடைமுறைப்படுத்த சில மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது. அதேபோல், மின் கட்டணம் உயர்த்தப்பட்டாலும் பற்றாக்குறை பிரச்னைகள் முழுமையாக சரி செய்யப்படாது என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. 

loading...

Advertisement

Advertisement

Advertisement