குளியலறையில் ‘காப்பாற்றுங்கள் ஹரி’ என எழுதிய மனைவி எங்கே? 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சேலம் அருகே வீட்டில் இருந்த பெண் காணாமல் போன நிலையில் என்னை காப்பாற்றுங்கள் என குளியலறையில் ரத்தத்தால் எழுதப்பட்டிருப்பதால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.


Advertisement

சேலம் மாவட்டம் சின்னத் திருப்பதியைச் சேர்ந்தவர்கள் ஹரிஹரன் - தமிழ்ச்செல்வி தம்பதி. ஜவுளித் தொழில் செய்து வரும் ஹரிஹரன் வழக்கம் போல் பணி முடித்துவிட்டு வீடு திரும்பினார். ஆனால் அங்கு அவரது மனைவி தமிழ்ச்செல்வி இல்லை. வீட்டில் ரத்தக்கறையுடன் ஹாக்கி ஸ்டிக் ஒன்று கிடந்தது.


Advertisement

தரையில் ஆங்காங்கே ரத்தம் சிந்திக் கிடந்தது. அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஹரிஹரன் வீடு முழுவதும் தமிழ்ச்செல்வியை தேடினார். குளியலறைக்குச் சென்று பார்த்த போது உறைந்து போனார் ஹரிஹரன். குளியலறை சுவரில் "விமல் ஆளுங்க. காப்பாத்து ஹரி" என ரத்தத்தால் எழுதப்பட்டு இருந்ததே அதற்கு காரணம். 

கதிகலங்கிப் போன ஹரிஹரன் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். தடயவியல் வல்லுநர்கள் மற்றும் மோப்ப நாயுடன் விரைந்து வந்தது காவல்துறை. வீட்டிலிருந்த தடயங்கள் சேகரிக்கப்பட்டன. ரத்தத்தால் எழுதப்பட்ட வார்த்தைகளும், ரத்தக்கறை படிந்த ஹாக்கி மட்டையும் தமிழ்ச்செல்வி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன. 


Advertisement

விமல் என்பவர் ஹரிஹரனிடம் பணியாற்றும் ஊழியர். எனவே இருவரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விமல் பெயர் ஹரிஹரன் வீட்டு குளியலறையில் ரத்தத்தால் எழுதப்பட்டிருப்பது ஏன்? தமிழ்ச்செல்விக்கு என்ன ஆனது? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

loading...

Advertisement

Advertisement

Advertisement