வருமான வரித்துறை வழக்கில் நீதிமன்றத்தில் விஷால் ஆஜர் 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வருமான வரித்துறை வழக்கில் நடிகர் விஷால், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.


Advertisement

விஷால் ஃபிலிம் பேக்டரி தயாரிப்பு நிறுவனத்தின் பணியாளர்களிடம் பிடித்த செய்த டிடிஎஸ் (TDS) தொகையை செலுத்தாததால் விஷால் மீது வருமான வரித்துறை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கு ஜூலை 24ல் விசாரணைக்கு வந்தது. அப்போது விஷால் ஆஜராகவில்லை. 


Advertisement

மீண்டும் வழக்கை ஆகஸ்ட் 2ஆம் தேதி ஒத்திவைத்த நீதிபதி, விஷாலை நேரில் ஆஜராகி பதிலளிக்க உத்தரவிட்டார். ஆனால் அப்போதும் விஷால் ஆஜராகாத காரணத்தினால் அவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அடுத்த விசாரணை தேதிக்குள் விஷால் தரப்பு நீதிமன்றம் சென்று விளக்கமளிக்க வேண்டும். இல்லையென்றால் காவல்துறை உதவியுடன் நீதிமன்றம் அழைத்துவரப்படுவார் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் வருமான வரித்துறை வழக்கில் நடிகர் விஷால் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

loading...

Advertisement

Advertisement

Advertisement