“மோடியை பாராட்டிய விவகாரம்” - சசிதரூரிடம் விளக்கம் கேட்க காங். திட்டம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டிய விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப அக்கட்சி திட்டமிட்டுள்ளது.


Advertisement

பிரதமர் மோடி தலைமையிலான அரசு இரண்டாவது முறையாக ஆட்சியில் அமர்ந்தது முதல் பல்வேறு விதமான அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கு முக்கியமான காரணமாக என்னவென்றால் முன்பு இருந்தது போல் எதிர்க்கட்சிகளிடம் அவ்வளவு ஒற்றுமையுடன் இல்லை. இதில் குறிப்பாக காங்கிரஸ் கட்சியே ஒற்றுமையுடன் இல்லை என்றே தெரிகிறது.

சமீப காலமாக பாஜக அரசின் செயல்பாடுகளை எதிர்ப்பதில் காங்கிரஸ் கட்சிக்குள் இரட்டை நிலைப்பாடு இருந்து வருகிறது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விவகாரத்தில் மோடி அரசின் செயல்பாடுகளை நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கடுமையாக கண்டித்து பேசினர். ஆனால், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் சிலர் 370 பிரிவு நீக்கத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். 


Advertisement

          

இதன் தொடர்ச்சியாக, பிரதமர் மோடி கொண்டு வரும் அனைத்து திட்டங்களையும் விமர்சித்துக் கொண்டிருந்தால் மக்கள் மத்தியில் அது எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என காங்கிரஸ் மூத்த அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருந்தார். மோடி அரசு கொண்டு வரும் நல்ல திட்டங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் விமர்சிக்க கூடாது என அவர் கூறினார். ஜெய்ராம் ரமேஷின் இந்த கருத்துக்கு அக்கட்சியின் மூத்த தலைவர்கள் சசிதரூர் மற்றும் அபிஷேக் மனு சிங்வி ஆதரவு தெரிவித்திருந்தனர். மோடி கொண்டு வரும் திட்டங்களை பாராட்டுவதில் தயக்கமில்லை என்றும் மக்கள் ஏன் அவருக்கு வாக்களிக்கிறார்கள் என்பதை யோசிக்க வேண்டும் என்றும் சசிதரூர் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், மோடி அரசை பராட்ட வேண்டும் என கருத்து தெரிவித்த சசிதரூரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப அக்கட்சி திட்டமிட்டுள்ளது. சசிதரூரின் கருத்துக்கு கேரள காங்கிரஸ் தலைவர் சென்னிதாலா எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement