ஆர்.பி.ஐ உபரிநிதி அறிவிப்பு : சென்செக்ஸ், நிஃப்டி இன்றும் உயர்வு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இரண்டாவது வர்த்தக நாளான இன்று இந்திய பங்கு சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஏற்றத்துடன் முடிந்துள்ளன.


Advertisement

இந்திய பங்குசந்தைகள் நேற்று குறிபிடத்தகுந்த உயர்வை அடைந்தது. நேற்றைய தினம் மும்பை பங்கு சந்தை மதிப்பீட்டு குறியீடான சென்செக்ஸ் 792.96 புள்ளிகள் அல்லது 2.16% அதிகரித்து 37,494.12 புள்ளிகளுடன் முடிந்தது. இதேபோன்று தேசிய பங்கு சந்தை மதிப்பீட்டு குறியீடான நிஃப்டி 228.50 புள்ளிகள் அல்லது 2.11% அதிகரித்து 11,057.85 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. 


Advertisement

இந்நிலையில் நேற்று இரவு மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி ரூபாய் உபரி நிதியை வழங்குவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதன் எதிரொலியாக இந்திய பங்கு சந்தை மதிப்புகள் இன்றும் உயர்ந்துள்ளன. அதன்படி, மும்பை பங்குசந்தை மதிப்பீட்டு குறியீடான சென்செக்ஸ் 147 புள்ளிகள் அல்லது 0.39% உயர்ந்து 37,641 புள்ளிகளுடன் முடிவடைந்தது. தேசிய பங்குசந்தை மதிப்பீடான நிஃப்டி 48 புள்ளிகள் அல்லது 0.43% அதிகரித்து 11,105 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. 

ஐசிஐசிஐ வங்கி, ஹெச்.டி.எஃப்.சி, ஆர்.ஐ.எல் மற்றும் எல் அண்ட் டி ஆகிய நிறுவனங்கள் சென்செக்ஸ் மதிப்பீட்டில் 147 புள்ளிகள் உயர்ந்தன. டாடா மோட்டார்ஸ் 8.96% அதிகரித்தது. அத்துடன் டாடா ஸ்டீல், இண்டஸ்லண்ட் வங்கி, யெஸ் வங்கி, வேதாந்தா மற்றும் என்.டி.பி.சி ஆகியவை 4.05% உயர்வை சந்தித்தன. அதேசமயம் பாரதி ஏர்டெல், டெக் மகேந்திரா, இன்ஃபோசிஸ், டி.சி.எஸ் மற்றும் கோடாக் வங்கி ஆகியவை சரிவடைந்தன. 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement