ரிசர்வ் வங்கியிடம் திருடுவது பயனளிக்காது: ராகுல் காந்தி

-Stealing-From-RBI-Won-t-Work---Rahul-Gandhi-Attacks-Centre-Over-Payout

பொருளாதாரச் சீரழிவுக்கு, தீர்வு காண வழி தெரியாமல் பிரதமரும் நிதி அமைச்சரும் திணறி வருவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.


Advertisement

ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், தாங்களாவே உருவாக்கிய பொருளாதாரச் சீரழிவுக்கு ரிசர்வ் வங்கியிடம் இருந்து திருடும் நிதியால் பயன் ஏற்படாது என்றும் குறிப்பிட்டுள்ளார். ரிசர்வ் வங்கியின் நிதியை பறிப்பது, துப்பாக்கிக் குண்டு காயத்துக்கு மருந்துக் கடையில் இருந்து பேண்டேஜை பறித்து ஒட்டுவது போன்றதாகும் என்றும் ராகுல் சாடியுள்ளார். 

பட்ஜெட்டில் காணாமல் போன நிதியை ஈடு செய்வதற்காக ரிசர்வ் வங்கியிடம் அரசு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயைப் பெறுவதாகக் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலாவும் விமர்சித்திருக்கிறார்.
 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement