வரதட்சணை கொடுப்பதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மாமியாரின் மூக்கை மருமகன் கடித்த சம்பவம் உத்திரப்பிரதேசத்தில் நடந்துள்ளது.
உத்திரப்பிரதேசத்தின் நகட்டியா பகுதியைச் சேர்ந்த கந்த ரகுமான் என்பவரின் மகள் சாந்த்பி. தன் மகளை முகமது அஷ்பாக் என்பவருக்கு ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் செய்து வைத்தார் ரகுமான். தன் மகளின் திருமணத்துக்காக ரூ.10 லட்சத்தை வரதட்சணைக்காகவும் கொடுத்துள்ளார்.
திருமணம் முடிந்து ஒரு வருடம் கடந்த நிலையில் இன்னும் ரூ.5 லட்சத்தை பிறந்த வீட்டிலிருந்து வாங்கி வருமாறு முகமது அஷ்பாக் தன் மனைவிடம் கேட்டுள்ளார். ஆனால் பணம் தர ரகுமான் மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த முகமது அஷ்பாக், தன் மனைவியை துன்புறுத்தியுள்ளார்.
இந்தத் தகவல் ரகுமானுக்கு தெரிய வர தன் மனைவி குல்ஷானுடன் மகளின் வீட்டுக்கு விரைந்துள்ளார். அங்கு வரதட்சணை குறித்து இரு வீட்டாரும் பேசியுள்ளனர். பேச்சுவார்த்தை வாக்குவாதமாக முற்ற, கோபமடைந்த முகமது அஷ்பாக், தன் மாமியாரான குல்ஷானின் மூக்கை கடித்துள்ளார். அதே நேரத்தில் முகமது அஷ்பாக்கின் தந்தை குல்ஷானின் காதை கத்தியால் வெட்டியுள்ளார்.
ரத்தவெள்ளத்தில் குல்ஷான் மயங்கி விழ, முகமது அஷ்பாக்கும் அவரது தந்தையும் தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர். காயமடைந்த குல்ஷான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Loading More post
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி