பாகிஸ்தானிலும் பறக்குது பாகுபலி கொடி!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பாகுபலி2 படம் பாகிஸ்தானிலும் வசூல் சாதனை படைத்து வருகிறது.


Advertisement

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, தமன்னா, அனுஷ்கா உட்பட பலர் நடித்துள்ள படம், ’பாகுபலி’. முதல் பாகம் ஹிட்டானதை அடுத்து, இரண்டாம் பாகம் உருவாகி கடந்த மாதம் வெளியானது. இந்தப் படமும் இந்தியா முழுவதும் ஹிட்டாகி, வசூலில் சாதனை படைத்து வருகிறது. இன்னும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்தப் படம், பாகிஸ்தானில் சமீபத்தில் வெளியானது.

‘பாகிஸ்தானில் முக்கியமான தியேட்டர்களில் பாகுபலி ரிலீஸ் ஆனது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தின் சண்டைக்காட்சிகள், இந்து மத நம்பிக்கைகள் மற்றும் பண்பாடு ஆகியவையும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளன. வழக்கமாக சல்மான் கான், ஷாரூக் கான், ஆமீர்கான் நடித்த படங்கள்தான் இங்கு பரபரப்பாக ஓடும். ஆனால், இந்தியாவில் இருந்து வெளியாகியுள்ள ஒரு டப்பிங் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது இதுதான் முதல் முறை’ என்று பாகிஸ்தான் வினியோகஸ்தர் அம்ஜத் ரஷீத் தெரிவித்துள்ளார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement