‘வேலை உத்தரவாதம்தான் காரணம்’ - ரயில்வே டிராக்மேன் பணியில் ஐஐடி இளைஞர் 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஐஐடியில் படித்த இளைஞர் ஒருவர் ரயில்வே தேர்வு எழுதி டிராக்மேன் பணியில் சேர்ந்துள்ளது அதிகாரிகளை ஆச்சர்யப்பட வைத்துள்ளது.


Advertisement

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஷ்ரவன் குமார். இவர் மும்பை ஐஐடியில் பி.டெக் மற்றும் எம்.டெக் படித்துள்ளார். 2015ஆம் படிப்பை முடித்தது முதல் இவர் அரசு பணிக்காக தன்னை தயார் செய்து வந்துள்ளார். இவருடன் படித்த ஐஐடி நண்பர்கள் பலரும் தங்கள் துறையில் பணிக்கு முயற்சிக்குமாறு வலியுறுத்தியுள்ளனர். ஆனால், குமார் தொடர்ந்து அரசு பணிக்கு முயன்றுள்ளார்.

சமீபத்தில் ரயில்வே துறை பணிக்கான ஆர்.ஆர்.பி தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளார். ரயில்வேயின் ‘டி’ பிரிவு பணி அவருக்கு கிடைத்தது. ஜார்க்கண்ட் மாநிலத்தின் தன்பாத் ரயில்வே டிவிஷனில் அவர் டிராக்மேன் பணிக்கு சேர்ந்துள்ளார். ஐஐடி படித்தவர் டி பிரிவு வேலைக்கு வந்ததை அவரது உயர் அதிகாரிகள் ஆச்சர்யத்துடன் பார்த்துள்ளனர். 10 ஆம் வகுப்பு மட்டுமே தகுதியாக உள்ள தேர்வை ஐஐடியில் படித்தவர் எழுதி தேர்ச்சியாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

இதுகுறித்து ஷ்ரவன் குமார் பேசிய போது, பணி உத்தரவாதம்தான் அரசு வேலைக்கு வந்ததற்கான காரணம் என கூறியுள்ளார். 

loading...

Advertisement

Advertisement

Advertisement