சீன முதலீட்டு நிறுவனமான அலிபாபா இந்தியாவில் தனது புதிய முதலீடுகளை தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்துள்ளது.
இந்திய சந்தைகளில் மிகப்பெரும் முதலீட்டாளர்களுள் ஒருவராக கருதப்படுபவர் ஜாக்மா இவர் அலிபாபா குழுமத்தின் தலைவராக இருக்கிறார். இந்நிறுவனம் இந்தியாவின் பேடிஎம் மற்றும் சோமேட்டோ நிறுவனங்களில் பெரும் முதலீடுகளை செய்தது. அதைத்தொடர்ந்து மேலும் சில நிறுவங்களிலும் முதலீடுகளை வாரி இரைத்தது. இந்நிலையில் தற்காலிகமாக இந்தியாவில் முதலீடு செய்வதை அலிபாபா குழுமம் நிறுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் ராகவ் பாஹ்ல் என்பவரின் தலைமையில் 4 பேர் பொருளாதார நிபுணர் குழுவை அலிபாபா குழுமம் நியமித்தது.
இந்தக் குழு இந்திய பொருளாதார நிலை குறித்து அளித்த தகவலின் அடிப்படையில், இந்தியாவில் முதலீடு செய்வதை அலிபாபா குழுமம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. பேடிஎம் மற்றும் சோமேட்டோவில் வளர்ச்சி பெற்ற அலிபாபா குழுமம், ஸ்நாப் டீல் மற்றும் பேடிம் மால் ஆகியவற்றில் சந்தித்த கடும் சவால்களால் முதலீடுகளை நிறுத்தும் முடிவுக்கு வந்துள்ளது. ஃபிளிப் கார்ட் மற்றும் அமேசான் நிறுவனத்தில் வேகமான வளர்ச்சியால் இந்த சரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அலிபாபா நிறுவனம் கடந்த 2015ஆம் ஆண்டு பேடிஎம் நிறுவனத்தில் 680 மில்லியல் டாலர் முதலீடு செய்தது. அத்துடன் ஸ்நாப் டீலில் 500 மில்லியன் டாலர் முதலீடு செய்திருந்தது. 2018ஆம் ஆண்டில் பேடிஎம் மாலில் 450 மில்லியன் டாலரும், அதற்கு முன் 2017ல் பேடிஎம் மாலில் 200 மில்லியன் டாலரும் முதலீடு செய்தது. மேலும், 2018ஆம் ஆண்டில் பிக்பாஸ்கெட்டில் 200 மில்லியன் டாலரும், சோமேட்டோவில் 150 மில்லியன் டாலரும் முதலீடு செய்திருந்தது. ஆனால் 2019ஆம் ஆண்டில் பிக்பாஸ்கட்டில் 50 மில்லியன் டாலர் மட்டுமே முதலீடு செய்திருப்பதது குறிப்பிடத்தக்கது. இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்த நிலையால் அலிபாபா தற்போது சிறிய முதலீடுகளில் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
கட்சிக்கு தனித்துவத்தை விரும்பும் வைகோ: கடந்த பேரவைத் தேர்தல்களும் மதிமுகவும்!
அசாம் தேர்தல் களம்: தேயிலைத் தொழிலாளர்களை குறிவைக்கும் பாஜக, காங்கிரஸ்!
திருப்பூர்: ஏ.டி.எம். இயந்திரம் கொள்ளை - வட மாநில கொள்ளையர்கள் 6 பேர் கைது.!
சூடுபிடிக்கும் தமிழக தேர்தல்களம்.. மீண்டும் குழப்பத்தில் புதுச்சேரி.. முக்கியச் செய்திகள்!
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்களா? இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?