JUST IN

Advertisement

நிர்மலா சீதாராமன் அறிவிப்பு எதிரொலி : சென்செக்ஸ், நிஃப்டி கிடுகிடு உயர்வு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்திய பங்கு சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் இன்று கிடுகிடுவென உயர்ந்துள்ளன.


Advertisement

வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று இந்திய பங்கு சந்தை முன்னேற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. மும்பை பங்கு சந்தை மதிப்பீட்டு குறியீடான சென்செக்ஸ் 792.96 புள்ளிகள் அல்லது 2.16% அதிகரித்து 37,494.12 புள்ளிகளுடன் முடிந்தது. இதேபோன்று தேசிய பங்கு சந்தை மதிப்பீட்டு குறியீடான நிஃப்டி 228.50 புள்ளிகள் அல்லது 2.11% அதிகரித்து 11,057.85 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. 


Advertisement

இன்றைய வர்த்தக நாளில் வங்கி நிறுவனங்கள் அதிகபட்ச முன்னேற்றத்தை கண்டன. ஹெச்.டி.எஃப்.சி, யெஸ் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், ஐசிஐசிஐ வங்கி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, கோடாக் வங்கி மற்றும் எல் அண்ட் டி ஆகியவை 5.37% வளர்ச்சி அடைந்தன. அதேசமயம் வேதாந்தா, சன் பார்மா, ஹீரோ மோட்டோகார்ப், டாடா ஸ்டீல், ரிலையன்ஸ், டாடா மோட்டார்ஸ், மாருதி மற்றும் பஜாஜ் ஆட்டோ ஆகியவை அதிகபட்சமாக 2.07% சரிவடைந்தன. 

தொடர் வீழ்ச்சிகளுக்குப் பின்னர் இந்திய பங்கு சந்தை இன்று குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தை கண்டுள்ளது. கடந்த வெள்ளியன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், முதலீட்டாளர்களுக்கு பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட நிலையில் இந்திய பங்குசந்தை கிடுகிடு உயர்வை சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement