[X] Close >

மூன்று நாடுகள், 14 நாள்கள்: தமிழக முதல்வரின் வெளிநாட்டுப் பயணம்

cm-palanisamy-foreign-tour-visit

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டு பயணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.


Advertisement

வெளிநாடு வாழ் தமிழர்கள் மற்றும் பிற முதலீட்டார்களிடம் இருந்து முதலீடுகளை பெற தமிழக முதலமைச்சர் பழனிசாமி இங்கிலாந்து, அமெரிக்கா, மற்றும் துபாய் ஆகிய மூன்று நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.


Advertisement

அதன்படி வரும் 28-ஆம் தேதி சென்னையில் இருந்து புறப்படும் முதலமைச்சர் பழனிசாமி லண்டன் செல்கிறார். இதனையடுத்து செப்டம்பர் 1-ஆம் தேதி இங்கிலாந்தில் இருந்து பறப்பட்டு 2-ஆம் தேதி நியூயார்க் செல்கிறார் இதனைத்தொடர்ந்து செப்டம்பர் 8 மற்றும் செப்டம்பர் 9 ஆகிய தேதிகளில் துபாயில் தொழில் முனைவோர் ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி உரையாற்றுகிறார். இதனையடுத்து செப்டம்பர் 10-ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி மீண்டும் தமிழகம் திரும்ப உள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close